MODISAYS

Narendra Modi

X / TwitterPost 2108961900344270884
நாளை, அக்டோபர் 11 அன்று, சென்னையில் ரூ. 13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நிறைவடைந்த திட்டங்களின் துவக்க விழாவும் நடைபெறுகின்றன. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாவது கட்டத்தின் பூந்தமல்லி-வடபழனி வழித்தடம் துவக்கி வைக்கப்படும். கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலங்கள் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் துறைமுகம் சார்ந்த உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. சென்னை ஐஐடியில் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையம் (எஸ்ஜிபிசி ) துவக்கிவைக்கப்படுகிறது. கல்வித்துறையில் மகத்தான பணிகளை மேற்கொண்டுள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழாக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்கிறேன். pib.gov.in/PressReleaseDetai…

Captured source text. Text source.

Original content from X / Twitter. If unavailable, open the original link below.

Open original ↗

Source IDs: nitter-public-timeline. Date precision: millisecond. Coverage details.

Copy link

Select and copy this post’s page URL.